புதிய கல்விக் கொள்கை குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை

Aug 01, 2020 11:41 AM 592

புதிய கல்விக் கொள்கையின் சிறப்புகள் குறித்து நாட்டு மக்களிடம் இன்று மாலை பிரதமர் மோடி உரையாற்றுகிறார். புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. மேலும், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பெயரும் "மத்திய கல்வி அமைச்சகம்" என்று மாற்றப்பட்டது. இதுதவிர, 5ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம், கல்லூரிகளில் சேர்வதற்கு தேசிய அளவிலான ஒரே நுழைவுத் தேர்வு, எம்.ஃபில். படிப்பு நிறுத்தம், தொழிற்கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் உள்ளிட்ட அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4.30 மணிக்கு உரையாற்றுகிறார். புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்தும், பிரதமர் மோடி விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comment

Successfully posted