முத்தலாக் முறைக்கு இந்தியாவில் இடமில்லை அமித்ஷா பெருமிதம்

Oct 16, 2018 05:45 AM 487

முத்தலாக் முறைக்கு இந்தியாவில் இடமில்லை என்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் சாட்னா தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய அமித்ஷா, இஸ்லாமிய சகோதரிகளின் நலனில் காங்கிரஸ் கட்சி ஆர்வம் காட்டவில்லை என்றும், முத்தலாக் போன்ற விவகாரங்களை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு தைரியம் கிடையாது எனவும் கூறினார்.

பெண்களுக்கான பாதுகாப்பு, முன்னுரிமையை பற்றி பேசுவதோடு மட்டும் இல்லாமல் அவர்களுக்கான நலத்திட்டங்களையும் பாஜக செய்து வருவதாக தெரிவித்தார்.

மத்திய அமைச்சரவையில் சுஷ்மா சுவராஜ் , நிர்மலா சீதாராமன் என உயரிய பொறுப்புகளில் பெண்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறிய அமித்ஷா, மத்திய அமைச்சரவையில் மட்டும் 9 பெண் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Comment

Successfully posted