நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய குடியிருப்புகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

Nov 23, 2020 09:54 AM 2173

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய குடியிருப்புகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

டெல்லி பி.டி.மார்க் சாலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 8 பழைய கட்டடங்கள் சீரமைக்கப்பட்டு 76 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. புதிய குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு, சூரிய மின்னாற்றலை தயாரிக்கும் கூரைகள், LED விளக்குகள் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை விட 14 சதவீதம் குறைவாக கட்டுமானப் பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், காலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய குடியிருப்புகளை திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

Comment

Successfully posted