வேளாண்மை அடிப்படை கட்டுமான வசதி நிதி திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

Aug 09, 2020 06:55 AM 784

1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண்மை அடிப்படை கட்டுமான வசதி நிதி திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

வேளாண்மை துறையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்காக 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதி திட்டத்தை நிறைவேற்ற மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்து உள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார். அப்போது, பிரதமர்-விவசாயிகள் திட்டத்தின் கீழ் 6-வது தவணையாக எட்டரை கோடி விவசாயிகளுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கும் பணியையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

Comment

Successfully posted