வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பிரசாரம்

Apr 25, 2019 06:35 PM 166

வாரணாசி தொகுதியில் தனது 2 நாள் பிரசாரத்தை, பிரம்மாண்ட பேரணியோடு பிரதமர் மோடி இன்று தொடங்கினார். வாரணாசி தொகுதியில் 2வது முறையாக பிரதமர் மோடி களமிறங்குகிறார். நாளை அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார். இதனையொட்டி, இன்றும் நாளையும் பிரதமர் கலந்து கொள்ளும் பிரமாண்ட பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்த திடலுக்கு வருகை தந்த பிரதமர் மோடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை உருவாக்கிய மதன் மோகன் மாளவியா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Comment

Successfully posted