வரலாற்று சிறப்பு மிக்க வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன- பிரதமர் மோடி

Dec 08, 2019 06:30 AM 1050

இந்தியாவில், நல்ல எதிர்காலத்திற்கான சிறந்த நிர்வாகம் ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற ஆங்கில நாளிதழின் தலைமைப் பண்பு மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் நல்ல எதிர்காலத்திற்கான சிறந்த நிர்வாகம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் வரலாற்று சிறப்பு மிக்க வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார். மேலும், புதிய கொள்கைகளுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மக்கள் மீது எந்த ஒரு அரசும் எந்த ஒரு சுமையையும் திணிக்கக் கூடாது என்றும், நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதில் அனைவருக்கும் பொறுப்புள்ளது என்று கூறிய அவர், மக்கள் நலனுக்காகவே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.+

Comment

Successfully posted