பிரதமர் நரேந்திர மோடி - ஜப்பான் பயணம்

Oct 13, 2018 11:49 AM 570

பிரதமர் நரேந்திர மோடி, வரும் 28-ம் தேதி இரண்டு நாள் பயணமாக ஜப்பான் செல்லவுள்ளார்.

இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான 12-வது உச்சி மாநாடு, கடந்த ஆண்டு , குஜராத் மாநிலம், காந்தி நகரில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கலந்து கொண்டார்.

இந்த ஆண்டுக்கான உச்சிமாநாடு ஜப்பானில் நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும்
28-ம் தேதி ஜப்பானுக்கு புறப்பட்டு செல்கிறார்.

இந்த மாநாட்டில் இருதரப்பிலான பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக , அகமதாபாத் - மும்பை இடையிலான புல்லட் ரயில் திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுத்துள்ளது குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. 

Comment

Successfully posted