நிவர் புயல் பாதிப்பு - தமிழகத்துக்கு உதவி செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் உறுதி!

Nov 28, 2020 07:02 AM 1419

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்ய தயாராக இருப்பதாக முதலமைச்சரிடம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

நிவர் புயல் மீட்பு பணிகளை தமிழக அரசு முழுவீச்சில் மேற்கொண்டுள்ள நிலையில், புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக முதலமைச்சரிடம் கேட்டறிந்தார். புயலின் பாதிப்புகள் மற்றும் இழப்புகள் குறித்து, பிரதமரிடம் முதலமைச்சர் விரிவாக விளக்கினார். அப்போது, தமிழகத்திற்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக முதலமைச்சரிடம் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

இதனிடையே, நிவர் புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மத்திய படைகள் அனுப்பப்படும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Comment

Successfully posted