சீனாவிலுள்ள இந்தியர்களை மீட்ட குழுவினருக்கு பிரதமர் பாராட்டு

Feb 14, 2020 07:20 AM 401

சீனாவில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட ஏர் இந்தியா மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களை பாராட்டி பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் சீனாவிற்கு மற்ற நாடுகள் விமான சேவையை முற்றிலும் நிறுத்தியது. இந்நிலையில் சீனாவிலுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு 2 விமானங்களை அனுப்பியது. சீனாவிலிருந்து 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் விமானம் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். மீட்பு பணியில் ஈடுபட்ட 34 பேர் அடங்கிய குழுவிற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில், மீட்பு பணியில் ஈடுபட்ட ஏர் இந்தியா மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் என மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த கடிதத்தை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர், மீட்புக் குழுவினரிடம் வழங்கினார்.

Comment

Successfully posted