துண்டு சீட்டு கூட இல்லை...2 ஆண்டு சாதனையை அசத்தலாக சொல்லும் பிரதமர்

Nov 06, 2019 01:03 PM 751

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக பதவி வகிப்பவர் ஜெசிந்தா ஆர்டர்ன். 39 வயதான அவர் கடந்த 2 வருடங்களாக அந்நாட்டின் பிரதமராக உள்ளார். பதவி காலத்தில் பல விஷயங்களை நுணுக்கமாகவும், திறமையாகவும் கையாண்டதால் பலரின் பாராட்டை பெற்றுள்ளார்.

இதற்கிடையில் 2 ஆண்டு கால சாதனையை 2 நிமிட வீடியோவில் சொல்ல முடியுமா என அலுவலக ஊழியர்கள் ஜெசிந்தா ஆர்டர்னிடம் சவால் விட்டுள்ளனர். அதனை ஏற்றுக்கொண்ட அவர், மிகத்துல்லியமான புள்ளி விவரங்களோடு எந்த குறிப்புகளும் இல்லாமல் அழகாக பேசி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் 92 ஆயிரம் பேருக்கு வேலை, 2200 பேருக்கு வீடுகள், 1.40 லட்சம் மரக்கன்றுகள், கேன்சர் தடுப்பு அமைப்பு போன்ற பல சாதனைகளை அவர் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted