பயங்கரவாத இயக்க தலைவர்களை என்கவுன்டர் செய்ய முன்னுரிமை - முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்

May 08, 2020 08:57 AM 1035

பயங்கரவாத இயக்கங்களின் தலைவர்களை என்கவுன்டர் செய்ய முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்களே வன்முறையை பரப்புவதாகவும், பொய்யான தகவல்களை பரப்பி இளைஞர்களை தவறாக வழிநடத்துவதாகவும் பிபின் ராவத் குற்றம்சாட்டியுள்ளார். பயங்கரவாத இயக்கங்களின் தலைவர்களை என்கவுன்டர் செய்ய ராணுவம், தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். தீவிரவாத இயக்கத் தலைவர்கள் கொல்லப்பட்டால் ஜம்மு-காஷ்மீரில் வன்முறையும், தீவீரவாத அமைப்புகளில் இணைவோரின் எண்ணிக்கையும் குறைந்து விடும் என முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

((கோப்புக்காட்சி

Comment

Successfully posted