தனியார் நிறுவன மேலாளருக்கு பட்டாக் கத்தியால் சரமாரி வெட்டு

May 12, 2021 12:50 PM 2900

சென்னையில் மாமூல் கேட்டு தனியார் நிறுவன மேலாளரைக் கத்தியால் வெட்டிய பிரதீப் என்ற ரவுடியைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த காவலர் ஒருவர் பணி முடித்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது அவரை சூழ்ந்த மர்ம நபர்கள், தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக காவலர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது காவலரை மிரட்டியவர்கள் பிரபல ரவுடி பிரதீப் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் என்பதும், அதே நாளில் தனியார் நிறுவன மேலாளரை சரமாரியாக கத்தியால் தாக்கி பணம் பறிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Comment

Successfully posted