தனியார் சமையல் எரிவாயு நிறுவனத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்

Dec 15, 2019 06:19 PM 942

திண்டிவனம் அருகே, தனியார் சமையல் எரிவாயு நிறுவனத்தை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இளமங்கலத்தில் தனியார் சமையல் எரிவாயு நிறுவன திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு, நிறுவனத்தை திறந்து வைத்தார். இதில், அதிமுக மயிலம் ஒன்றிய செயலாளர் சேகர், ஒலக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் கிளை நிர்வாகிகள் உட்பட அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். முன்னதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு மேளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Comment

Successfully posted