விதிகளை மீறி ஒகேனக்கல் ஆற்றில் சென்ற பரிசல் விபத்து

Sep 12, 2019 06:49 AM 113

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விதிகளை மீறி பரிசல் சவாரி செய்த குடும்பத்தினர் சுழலில் சிக்கினர்.இதில் அந்த குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் சவாரி செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தடையை மீறி, பாண்டிச்சேரியை சேர்ந்த மனோ மற்றும் அவரது குடும்பத்தினரை, பரிசல் ஓட்டி மனோகரன், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, பரிசல், சுழலில் சிக்கியதில் அதில் பயணம் செய்த அஞ்சலாட்சி என்ற பெண் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். அவருடன் பரிசலில் சென்ற மூவர் உயிருடன் மீட்கப்பட்டனர். விபத்திற்கு காரணமான பரிசல் ஓட்டி மனோகரனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Comment

Successfully posted