ப்ரோ கபடி - அரியானா, டெல்லி அணிகள் வெற்றி

Oct 13, 2018 06:18 AM 712

ப்ரோ கபடி போட்டியின் 11 வது ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி , குஜராத் பார்ச்சூன் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. சோன்பட்டில் நடந்த இந்த ஆட்டத்தில் 32-25 என்ற புள்ளிகணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் மோனு கோயாத் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் புனேரி பல்தான் அணியை டபாங் டெல்லி அணி சந்தித்தது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியின் டெல்லி அணி 41-37 என்ற புள்ளி கணக்கில் புனே அணியை சாய்த்தது. புனே அணியை சேர்ந்த நிதின் தோமர், ப்ரோ கபடி தொடரில் 300 புள்ளிகளை எடுத்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது

Comment

Successfully posted

Super User

Tamil thalaivas