தீவிரவாத அமைப்புக்கு ஆதரவளித்த சீக்கிய அமைப்புக்கு தடை: மத்திய அரசு

Jul 11, 2019 09:22 AM 123

காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட சீக்கிய அமைப்புக்கு தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியிட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என சீக்கியத் தீவிரவாத அமைப்பான காலிஸ்தான் போராடி வருகிறது. அமெரிக்காவைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ‘நீதிக்கான சீக்கியர்கள்’ அமைப்பு காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்கள் மற்றும் அத்துமீறல்களின்போது தொடர்ந்து எதிர்ப்புக் குரல் எழுப்பி வரும் நிலையில், பஞ்சாப்பை தனிநாடாக அறிவிப்பது தொடர்பாக சீக்கியர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட சீக்கிய அமைப்புக்கு தடை விதித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் செயல்படுவதாலும், தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதாலும் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

Comment

Successfully posted