மேகாலயாவில் சுரங்கத்தில் சிக்கி இருக்கும் 15 தொழிலாளர்களை மீட்பதில் சிக்கல்

Dec 27, 2018 11:01 AM 126

மேகலயாவில் கடந்த 2 வாரங்களாக சுரங்கத்தில் சிக்கியுள்ள 15 பேரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேகலயாவில் ஜைன்டியா மாவட்டத்தில் உள்ள லைத்தின் ஆற்றில் கடந்த 13-ம் தேதி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள சுரங்கம் ஒன்றிலும் நீர் புகுந்தது. இதில் 5 தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் மேலும் 15 பேர் சுரங்கத்திற்குள் இருந்து வெளிவர முடியாமல் சிக்கி உள்ளனர்.

சுரங்கம் முழுவதும் தண்ணீர் புகுந்துள்ளதால் நீரை வெளியேற்றும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் நீரை வெளியேற்றும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்களை மீட்பதில் தொடர் சிக்கல் நிலவி வருகிறது.

Comment

Successfully posted