அதிமுக கொடியை சேதப்படுத்திய தி.மு.க.வினரை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம்

Aug 08, 2021 01:56 PM 3987

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில், அதிமுக கொடி, தி.மு.வினரால் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, அதிமுக துணை கொறடா ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் உள்ள அதிமுக கொடியை தி.மு.க. வினர் கிழித்து சேதப்படுத்தினர்.

அதிமுக கொடிக்கம்பத்தை சேதப்படுத்தி, அராஜக அத்துமீறலில் ஈடுபட்டுவரும் தி.மு.க.வினரைக் கண்டித்தும், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஆற்காடு ஹவுஸிங் போர்டு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

image

அதிமுக துணை கொறடா ரவி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர். அப்போது, தி.மு.க.வினரின் அத்துமீறலைக் கண்டித்து, கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Comment

Successfully posted