சென்னையில் தேடப்பட்ட சைக்கோ வாலிபர் கைது

Jun 12, 2019 11:55 AM 111

சென்னை மாதவரத்தில் 2 பேரின் மர்ம உறுப்புகளை துண்டித்த சைக்கோ இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் 26 ஆம் தேதி ரெட்டேரி அருகே அஸ்லாம் பாஷா என்பவர் பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல் சென்னையில் தங்கிப் பணிபுரியும் மற்றொரு இளைஞரும் மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், அவருடைய மர்ம உறுப்பை துண்டித்தது தெரிய வந்தது. சம்பவம் நடந்த பகுதிகளில் இருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்த போது இருசம்பவங்களிலும் ஒருவரே ஈடுபட்டது தெரிய வந்தது. இருசக்கர வாகனங்களில் வரும் நபர்களிடம் சைக்கோ ஆசாமி உரையாடுவதும் தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்திய காவல்துறையினர் மானாமதுரையில் சுற்றித் திரிந்த சைக்கோ ஆசாமியைக் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comment

Successfully posted