ஸ்ரீமுஷ்ணம் அருகே பிளாஸ்டிக் இல்லாத பசுமை திருமண விழாவிற்கு பொதுமக்கள் பாராட்டு

Sep 12, 2019 06:44 AM 105

ஸ்ரீமுஷ்ணத்தில் நடைபெற்ற முற்றிலும் பிளாஸ்டிக் இல்லாத பசுமை திருமண விழா அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ஆதிவராகநல்லூர் கிராமத்தை சேர்ந்த பரமானந்தன் என்பவரது குடும்ப திருமண விழா முற்றிலும் வித்தியாசமான, பாரம்பரிய முறையில் நடைபெற்றது. எங்கும் இயற்கை - எதிலும் பசுமை என்பதற்கேற்ப பிளாஸ்டிக் பொருட்கள் முழுவதுமாக தவிர்க்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. மணமக்கள் ஏர் கலப்பையை தொட்டு வணங்கி திருமண சடங்குகளை தொடங்கினர். திருமண விழாவில் பாரம்பரிய நெல் , மூலிகை செடிகள், பல வகையான விதைகள் காட்சிக்காக வைக்கபட்டிருந்தது. விருந்தினர்களுக்கு முற்றிலும் இயற்கை சார்ந்த கருப்பட்டியில் செய்யப்பட்ட பர்ஃபி , மொடக்கதான் தோசை, கம்பு தோசை உள்ளிட்ட பாரம்பரிய  உணவுகள் பரிமாறப்பட்டன. முற்றிலும் இயற்கை முறையில் நடைபெற்ற, இந்த பசுமை திருமண விழாவை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Comment

Successfully posted