கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்!

Jun 30, 2020 06:29 AM 361

தமிழகத்தில் ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக 15 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, நோய் தொற்று உள்ளவர்களுடன் தொடர்புள்ளவர்களை கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை அமல்படுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால் நோய் பரவலை தடுக்க முடியாது என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பொதுஇடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவ வேண்டும் என்றும், தேவையின்றி வெளியில் செல்வதை தவிற்க வேடும் என்றும் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கொரோனா பெருந்தொற்ற கட்டுப்படுத்த அரசு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Comment

Successfully posted