தைப்பூச திருவிழாவிற்கு பொது விடுமுறை!

Jan 05, 2021 12:16 PM 1093

தைப்பூச திருவிழாவிற்கு அரசு விடுமுறை அறிவித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா என தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா மாநிலத்திலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளிலும் தைப்பூச விழா விமர்சையாக கொண்டாடப்படுவதை முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மாவட்டங்கள் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இலங்கை, மொரீஷியஸ் நாடுகளை போல் தமிழ்நாட்டிலும் தைப்பூசத்திற்கு பொதுவிடுமுறை அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்ததாக அறிக்கையில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தாண்டு ஜனவரி 28-ம் தேதி கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவுக்கு பொது விடுமுறை அறிவித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இனி வரும் ஆண்டுகளில் தைப்பூச திருவிழா தினத்தை பொதுவிடுமுறை பட்டியலில் சேர்க்கவும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். 

Comment

Successfully posted