விருதுநகர் திமுக வேட்பாளர் பிரசாரத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

Mar 30, 2021 09:32 AM 637

விருதுநகரில் ஓட்டு கேட்டு சென்ற திமுக வேட்பாளரை பொதுமக்கள் ஊருக்குள் நுழைய விடாமல் விரட்டியடித்தனர்.

விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் மீண்டும் போட்டியிடுகிறார். விருதுநகர் ஒன்றியத்திற்குட்பட்ட அய்யனார் நகர் பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள அவர் சென்றார். அப்போது திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், ஊருக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சியில் துளியும் அக்கறை காட்டவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். எதிர்ப்பு அதிகரித்தை தொடர்ந்து காவல்துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க திமுக வேட்பாளர் தயாராக இருந்ததால் அவரை தங்கள் பகுதிக்குள் நுழைய அனுமதிக்க தயார் என்று பொதுமக்கள் நிபந்தனை விதித்தனர். இதற்கு அஞ்சிய திமுக வேட்பாளர் வாக்கு சேகரிக்காமல் திரும்பி சென்றார்.

image

Comment

Successfully posted