வேதாமிர்த ஏரியில் பூங்காக்கள் அமைக்கப் பொதுமக்கள் கோரிக்கை

Dec 02, 2019 12:23 PM 122

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வேதாமிர்த ஏரியில் மீண்டும் தடுப்புச்சுவர் மற்றும் சிறு பூங்கா அமைக்க 7 கோடியே 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்குப் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் உள்ள வேதாமிர்த ஏரியில் படித்துறை அமைத்து மீண்டும், தடுப்புச்சுவர் மற்றும் சிறு பூங்காக்களுடன் கூடிய நடைபாதை அமைத்திட வேண்டுமெனத் தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் வேதாமிர்த ஏரியில் பூங்காக்களுடன் கூடிய நடைபாதை அமைக்க 7 கோடியே 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கோரிக்கையை நிறைவேற்ற நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்குப் பொதுமக்கள் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

Comment

Successfully posted