அந்தியூரில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்ட தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி

Feb 26, 2020 09:34 AM 217

ஈரோடு மாவட்டம் அந்தியூரில், கோடை காலம் துவங்கும் முன்பே குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்ட அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். '

அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட காலமாக பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறையாக இருந்து வந்தது. எனவே, கோடைக்காலம் தொடங்கும் முன்பு, மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

மக்களின் கோரிக்கையை ஏற்று, 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்று இடங்களில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இதனை அந்தியூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணன் திறந்து வைத்து, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்த நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்ட அரசுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Comment

Successfully posted