அமைச்சர் பதவிக்கு மேலிடத்தில் மறுப்பு - அலுவலகம் மீது ஆதரவாளர்கள் வெறுப்பு

Jun 19, 2021 06:39 PM 1215

புதுச்சேரி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

image

புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர்கள் பதவி ஒதுக்கப்பட்டது. அதன்படி சபாநாயகராக பாஜக வை சேர்ந்த செல்வம் பதவியேற்றார்.

image

அமைச்சர்களை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தகவல் வெளியானது. ஆனால் பாஜக மேலிடம் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த ஜான்குமாரின் 100 க்கும் மேற்ப்பட்ட ஆதரவாளர்கள் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அப்போது அங்கிருந்த பேனர்களை ஆவேசத்துடன் கிழித்தெறிந்து அலுவலகத்தை சூறையாடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
image
imageComment

Successfully posted