புதுச்சேரியில், வரும் 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

Jul 11, 2021 04:48 PM 1924

புதுச்சேரியில், வரும் 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. புதுச்சேரியில், தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பது குறித்து, அம்மாநில கல்வித்துறை கருத்துகளை கேட்டறிந்தது.

இதனைத் தொடர்ந்து, வரும் 16ம் தேதி, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

முதல் கட்டமாக, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted

Super User

In which time Dharmapuri district school open