தமிழக போலீசாரை நடுக்கடலில் சிறைபிடித்து புதுச்சேரி மீனவர்கள் வாக்குவாதம்

Aug 24, 2021 06:33 PM 953

தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி, கடலூர் கடல் எல்லையில் மீன்பிடித்ததுடன், வலைகளை பறிமுதல் செய்ய முயன்ற தமிழக போலீசாரையும், புதுச்சேரி மீனவர்கள் நடுக்கடலில் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள், தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி, கடலூர் கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து, மீன்வளத்துறை உதவி இயக்குநர் சின்னகுப்பன் தலைமையில் கடலோரப் பாதுகாப்பு குழுமம் மற்றும் கடலூர் காவல்துறையினர் சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்ய படகில் நடுக்கடலுக்கு சென்றனர்.

image

அப்போது, 30-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த புதுச்சேரி மீனவர்கள், தமிழக போலீசாரை சூழ்ந்து கொண்டு பணி செய்ய விடாமல் தடுத்தனர்.

சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்ய முயன்ற தமிழக போலீசாரை மிரட்டும் தொனியில் புதுச்சேரி மீனவர்கள் பேசியதுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பிறகு புதுச்சேரி மீனவர்களின் படகுகளில் இருந்த சுருக்குமடி வலைகளை தமிழக போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, கடலூர் கடல் பகுதியில் மீன்பிடித்த புதுச்சேரி மீனவர்களை திருப்பி அனுப்பினர்.

Comment

Successfully posted