புஷ்பா படத்தின் முதல் பாகமான புஷ்பா தி ரைஸ்...

Dec 18, 2021 04:03 PM 6244

ஆந்திரா ஸ்டைல் காரசாரமான 'புஸ்பா' படம் எப்படி இருக்குன்னு இங்கே பார்ப்போம்...

இயக்குநர் சுகுமார் - அல்லு அர்ஜுன் கூட்டணில ‘புஷ்பா’ உருவாக ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்தே, இந்தப் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே இருந்தன.

அதுவும் ஃபஹத் பாசில் வில்லனாக நடிப்பதோடு, படமும் இரண்டு பாகங்களாக வெளியாகும்ன்னு சொல்ல, ரசிகர்களோட ஆரவாரத்துக்கு அளவே இல்லாம இருந்தது.

இது எல்லாத்தையும் கடந்து இப்போது திரையரங்குகளில் ரிலீஸான ‘புஷ்பா’ படம், ட்ரெய்லர்ல அல்லு அர்ஜுன் சொன்னது மாதிரியே ஃபையரா பட்டைய கிளப்பிட்டு இருக்கு.

செம்மரக்கட்டைகளின் மதிப்பு என்ன... அவைகள் எங்கிருந்து கடத்தப்படுகின்றன... அதன் பின்னணிகள் என்ன? என்ற சிறிய அனிமேஷன் காட்சியில் இருந்து தொடங்குகிறது படம். அப்படியே நேராக ஆந்திராவின் சேசாலம் வனப்பகுதியில் அல்லு அர்ஜுனின் அதிரடியோடு கதையும் தொடங்குகிறது.

சாதாரண கூலித் தொழிலாளியாக செம்மரக்கட்டைகளை கடத்தும் புஷ்ப ராஜூ (அல்லு அர்ஜுன்), அதன் பின்னர் எப்படி அந்த சாம்ராஜ்யத்தையே தனக்கு கீழ கொண்டு வருகிறான் என்பது தான் மொத்த கதையும்.

இந்த பயணத்தில் அவன் வில்லன்களுடன் சந்திக்கும் பிரச்சினைகள், ராஷ்மிகாவுடனான காதல், தன் தந்தை யாரென்று சொல்ல முடியாமல் தவிக்கும் எமோஷனல் என, இவை எல்லாவற்றையும் பரபரக்கும் அதிரடி ஆக்சன் காட்சிகளால் அரங்கத்தை ஆர்ப்பரிக்கச் செய்யும் அல்லு அர்ஜுனின் சாகசங்கள் தான் ‘புஷ்பா.’

ரெட்ரோ ஸ்டைல் கதைக்களத்துக்கு தேவையான பின்னணியில் திரைக்கதை நகர்கிறது, ஆனால், அதில் மெட்ரோ ரயில் மாதிரி வேகம் இல்லாமல் சிறுசிறு தடைகளோடு சிக்கித் திணறுகிறது.

அல்லு அர்ஜுன் “யாருக்கும் அடங்காதவன் டா” என பஞ்ச் வசனம் பேசுறதோட நிறுத்தாம, ஆந்திரா மீல்ஸ் சைடிஸ் மாதிரி அடுத்தடுத்து வர்ற வில்லன்கள் அத்தன பேரையும் அடிச்சு துவம்சம் பண்றார்.

அவரோட லோக்கலான பாடி லேங்குவேஜ், பார்வை அத்தனையும் புஷ்பா கேரக்டருக்கு கச்சிதமா பொருந்திப் போகுது.

ராஷ்மிகா கதைக்கு தேவையான அளவு ராட்டினம் மாதிரி வந்து போறாங்க.

வில்லன்களும் வெரைட்டி வெரைட்டியா அல்லு அர்ஜுனுக்கு டப் கொடுத்து மிரட்டியிருக்காங்க.

முதல் பாதி திரைக்கதை காட்டாறு வெள்ளமா பாயுதுன்னா, இரண்டாம் பாதி பஞ்சரான லாரிய கயிறு கட்டி இழுத்துப் போற மாதிரி கொஞ்சம் தடுமாறுது.

image

படத்தோட கடைசி அரை மணி நேரத்துல தான் ஃபஹத் பாசில் அறிமுகமாகுறார்.

ஆனாலும், மூணு மணி நேரமா ஸ்கோர் பண்ணிட்டு வந்த அல்லு அர்ஜுன, மூணே சீன்ல காலி பண்ணிட்டுப் போய்ட்டார் ஃபஹத் பாசில்.

அதனால புஷ்பா செகண்ட் பார்ட்ல தான், அவருக்கும் அல்லு அர்ஜுனுக்கும் இடையேயான மோதல் ரொம்ப நெருப்பா இருக்கும்ன்னு எதிர்ப்பார்க்கலாம். அதுக்கான மிரட்டலான லீடும் க்ளைமேக்ஸ்ல இருக்கு.

தேவி ஸ்ரீபிரசாத் இசையில் பாடல்கள் எல்லாமே படத்துக்கு நல்ல எனர்ஜி, முக்கியமா ‘ஊ சொல்றியா மாமா’, ‘வாயா சாமி’ பாடல்கள் ரசிகர்கள்ல ஆட்டம் போட வைக்குது. அதேமாதிரி காட்டுக்குள்ள நடக்குற சண்டைக் காட்சில தன்னோட பின்னணி இசையால மிரட்டியிருக்கார்.

மிரோஸ்லா குபா ப்ரோசெக்கினின் ஒளிப்பதிவு ஆந்திர வனப்பகுதியோட பேரழகையும் மொத்தமா வளைச்சிப் போட்டுருக்கு.

அல்லு அர்ஜுனோட ஹீரோயிசத்துக்காக மட்டுமே திரைக்கதையின் நீளம் பயன்படுதே தவிர, அதனால படத்துல எந்த சுவாரஸ்யமும் இல்லை.

படத்தோட கதை மாதிரியே வசனங்களும் காரசாரமா இருக்கு, பஞ்ச் வசனங்கள் எல்லாமே வழக்கமான பழைய பஞ்சாங்கம் தான்.

எல்லா தரப்பு ரசிகர்களுக்குமான படமாக ‘புஷ்பா’ இருக்கும்ன்னு சொல்ல முடியாது, ஆனால், ஆந்திரா ரசிகர்களுக்கு கண்டிப்பா இந்தப் படம் கொண்டாட்டம் தான்.

- அப்துல் ரஹ்மான்

Comment

Successfully posted