நெஞ்சில் இருந்த 10 செ.மீ கட்டியை அகற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனை சாதனை

May 16, 2019 12:30 PM 41

50 வயதுடைய நபருக்கு நெஞ்சு பகுதிக்குள் இருந்த 10 சென்டி மீட்டர் அளவிலான கட்டியை புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.

ஆவுடையார்கோவிலைச் சேர்ந்த உடையப்பன் என்பவர் மூச்சுதிணறல் காரணமாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை சோதித்த மருத்துவர்கள், நெஞ்சு பகுதிக்குள் 10 சென்டி மீட்டர் நீளமும், 10 சென்டி மீட்டர் அகலம் உடைய கட்டி இருப்பது தெரியவந்தது. இதனால், நோயாளிக்கு அதிகமான மூச்சுத்திணறல் இருந்து வந்தது. இதையடுத்து, மருத்துவமனை முதல்வரும், மருத்துவருமான மீனாட்சி சுந்தரம் தலைமையில், உடையப்பனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு கட்டியினை அகற்றினர். சுமார் இரண்டரை மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, வெற்றிகரமாக கட்டி அகற்றப்பட்டது.

Comment

Successfully posted