முதலாமாண்டு நினைவஞ்சலியில் கல்வான் வீரர் கர்னல் சந்தோஷ் பாபுவின் சிலை திறப்பு

Jun 16, 2021 12:38 PM 882

கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் நடந்த மோதலில், வீரமரணமடைந்த கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு சிலை வைத்து, தெலங்கான அரசு மரியாதை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம், கிழக்கு டாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த கர்னல் சந்தோஷ் பாபுவின் சிலை, ஐதராபாத் அருகே சூர்யாபேட்டையில் நிறுவப்பட்டுள்ளது. கைகளில் தேசியக் கொடி ஏந்தி நிற்கும் சந்தோஷ் பாபுவின் சிலையை, தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ் திறந்து வைத்தார்.

 

Comment

Successfully posted