கொரோனா சிகிச்சை மையத்தில் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு!!

Jul 11, 2020 01:59 PM 964

சென்னையில் மக்கள் ஒத்துழைப்பு தருவதால் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும், ஐந்தாயிரம் படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையங்கள் தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டார். தமிழகத்தை பொறுத்தவரை மருத்துவ உள்கட்டமைப்பு வலுவாக உள்ளது எனவும், சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பிளாஸ்மா வங்கிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். மருத்துவமனைகளில் நிகழும் உயிரிழப்புகளை, கொரோனா உயிரிழப்பாக கருதக் கூடாது எனவும் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

Comment

Successfully posted