பட்டப்பகலில் கிளி ஜோசியர் வெட்டிக்கொலை - தேடப்பட்டு வந்த ரகு அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரண்

Dec 26, 2018 05:13 PM 283

திருப்பூர் அருகே பட்டப்பகலில் கிளி ஜோசியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த ரகு சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

திருப்பூரில் பட்டப்பகலில் கிளி ஜோசியர் ரமேஷ் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெண்களை வசியம் செய்ததாக எழுந்த புகாரில், கிளி ஜோசியர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே, கிளி ஜோசியரை கொலை செய்த கொலையாளியின் பெயர் ரகு என்றும், அவரது உருவப்படத்தையும் வெளியிட்டு, போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ரகு, சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
Related items

Comment

Successfully posted