ராகுல் பங்கேற்ற நிகழ்ச்சி:ஆய்வு நடத்த கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவு

Mar 15, 2019 03:25 PM 47

தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றது தொடர்பாக, விசாரிக்க கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் கடந்த 13ம் தேதி நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். இந்நிகழ்ச்சிக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநருக்கு கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மக்களவை தேர்தலையொட்டி நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும் சூழலில், கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசியல் தலைவர் ஒருவர் பங்கேற்க எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பதை விசாரித்து உடனடியாக அறிக்கை அனுப்பி தருமாறு கல்லூரிக் கல்வி இயக்குநர் வலியுறுத்தியுள்ளார்.

Comment

Successfully posted