ரபேல் விவகாரத்தில், ராகுல் காந்தி ஒரு தொடர் பொய்யர் -பியூஷ் கோயல்

Oct 13, 2018 12:11 PM 437

ரபேல் விவகாரத்தில், ராகுல் காந்தி ஒரு தொடர் பொய்யர் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பியூஷ் கோயல் ,ராகுல் காந்திக்கு வேறு வேலை இல்லாததால் தொடர் பொய்களை கூறுவதாக , கடுமையாக விமர்சித்தார்.

காங்கிரஸ் தலைமைக்கு சாதாரண கணக்குகளை கூட புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறிய அவர், அடிப்படை அரிச்சுவடி உண்மைகளும் அவர்களுக்கு புரியாது என்றார்.

ரிலையன்ஸ்-டசால்ட் ஒப்பந்தம் 2012ம் ஆண்டிலிருந்தே இருக்கிறது என அவர் தெரிவித்தார். காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமான சஞ்சய் பண்டாரி என்பவருக்கு ஒப்பந்தத்தை பிரான்ஸ் வழங்க மறுத்தததால் தான் காங்கிரஸ் பிரச்னையை திசை திருப்பி வருவதாக குற்றம் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் குற்றம் சாட்டினார்.

Comment

Successfully posted