ரபேல் விவகாரத்தில் மோடி குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்தி

Apr 15, 2019 02:53 PM 55

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் பதிலளிக்கக் கோரி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் பாஜக அரசு மீது தொடர் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தலுக்கு முன்பிருந்தே தங்களது விமர்சனங்களை தெரிவித்துவந்த காங்கிரஸ் கட்சியினர், தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், இந்த விவகாரத்தை மேலும் முன்னெடுத்தனர். தனது பல்வேறு பிரசாரக் கூட்டத்தில் ரபேல் விவகாரம் குறித்த பல்வேறு கருத்துக்களை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பதிவு செய்துவந்தார். சில தினங்களுக்கு முன்பு பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, ரபேல் விவகாரத்தில் மோடி குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்தார். இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் வரும் 22ஆம் தேதிக்குள் பதிலளிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, உச்ச நீதிமன்றம் தற்போது நோட்டீஸ் அளித்துள்ளது.

Comment

Successfully posted