ஜெய்பூரில் போராட்டத்தால் 23 ரயில்கள் ரத்து - ரயில்வே நிர்வாகம்

Feb 10, 2019 07:35 AM 153

ராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்களின் தொடர் போராட்டத்தால் 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் குஜ்ஜார் இன மக்கள் 5 சதவீத இட ஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் வழி தடத்தில் இரண்டாம் நாளாக நடந்த போராட்டத்தின் காரணமாக, சில ரயில்கள் மட்டும் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. மும்பையிலிருந்து ஜெய்ப்பூர் வழியாக டெல்லி செல்லும் முக்கிய வழிதடத்தில், போராட்டம் நடைபெறுவதால், 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த குஜ்ஜார் இன மக்கள், அரசாங்கங்கள் தங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், தங்களுக்கு கிடைக்க வேண்டிய 5 சதவீத இட ஒதுக்கீட்டை தர மறுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்

Comment

Successfully posted