சிவபெருமானுக்கு அப்பர் பெர்த் ஒதுக்கிய ரயில்வே துறை

Feb 17, 2020 01:37 PM 806

வாரணாசி- இந்தூர் இடையே செல்லும் ரயிலில் கடவுளுக்கு அப்பர் பெர்த் இருக்கை நிரந்தரமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் வாரணாசி சென்ற பிரதமர் மோடி நேற்றைய தினம் வாரணாசி- இந்தூர் இடையே செல்லும் ஏசி ரயிலான காசி மகாலால் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

image

இந்த ரயிலில் பி5-ல் அப்பர் பெர்த்  இருக்கையான 64வது சீட்டை கடவுள் சிவபெருமானுக்காக ஒதுக்கியுள்ளது ரயில்வே துறை.

image


மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் மகாகலுக்கு இறைவன் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளதை மக்களுக்கு தெரியப்படுத்தவே  இப்படி செய்யப்பட்டுள்ளதாக  வடக்கு ரயில்வேயின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக கடவுளுக்கென்று இருக்கை ஒதுக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted