மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டகள் உள்பட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்

May 01, 2021 08:26 AM 255

தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டகள் உள்பட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டகள் மற்றும் சேலம், தருமபுரி, ஈரோடு, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 37 டிக்ரி செல்சியஸ் வரை இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comment

Successfully posted