வெப்பச்சலனம் காரணமாக 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

May 26, 2020 06:00 PM 323

தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, கரூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியிலும் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயில் வாட்டி வதைக்கும் என்பதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted