தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்!!

Jul 06, 2020 08:47 AM 388

வேலூர், சேலம், கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுமெனவும், அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகுமெனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு, வடகிழக்கு அரபிக்கடலில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் இருதினங்களுக்கு மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தோவாலா, சின்னகல்லார், வால்பாறை, கலசப்பாக்கத்தில் 4 சென்டி மீட்டர் மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted