கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

Oct 29, 2018 08:43 AM 393

தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கடந்த வாரமே முடிவடைந்தாலும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தென் மேற்கு வங்கக் கடலில் இலங்கை அருகே வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

இதன் காரணமாக இன்று தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை இரு நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.


Comment

Successfully posted