தமிழர்களை விடுதலை செய்வதாக ராஜபக்சே கூறுவது ஏமாற்று வேலை - வைகோ

Nov 05, 2018 07:13 AM 168

ராஜபக்சே தமிழர்களை விடுதலை செய்ய உள்ளதாக கூறுவது ஏமாற்று வேலை என வைகோ தெரிவித்துள்ளார்.

பக்ரைனில் நடைபெற்ற தமிழ் இலக்கிய விழாவில் கலந்து கொண்ட பிறகு சென்னை திரும்பிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ராஜபக்சே மன்னிக்க முடியாத இனப்படுகொலை குற்றவாளி எனத் தெரிவித்தார்.

உலகின் கண்களில் மண்ணை தூவ, தன் மீதான வெளிநாடுகளின் அழுத்தத்தை குறைக்க ராஜபக்சே முயல்வதாக வைகோ தெரிவித்தார்.

தற்போது தமிழர்களை விடுதலை செய்வதாக கூறுவது, தமிழ் இனத்தை வேரறுக்க முற்பட்ட ராஜபக்சேவின் ஏமாற்று வேலை என வைகோ தெரிவித்தார்.

Comment

Successfully posted