திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ராஜபக்சே சாமி தரிசனம்

Feb 12, 2019 09:01 AM 127

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இந்தியா வந்துள்ளார். ஆந்திரா வந்த அவர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்தப் பிரசாதங்களைப் வழங்கி ஆசீர்வாதம் செய்தனர். கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராஜபக்சே, சுவாமி தரிசனம் சிறப்பாக நடைபெற்றது என தெரிவித்தார்.

இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள விவாதம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, சாமி தரிசனம் செய்ய வந்த இடத்தில் அரசியல் குறித்து பேச விரும்பவில்லை என்று பதிலளித்தார்.

Comment

Successfully posted