ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இணையச் சேவைகள் துண்டிப்பு

Nov 09, 2019 12:57 PM 103

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பையொட்டி ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று காலை 10 மணி முதல் நாளை காலை 10 மணி வரை இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

பண்டி என்னும் நகரில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜெய்சல்மீர் மாவட்டத்தில் இன்று முதல் வரும் முப்பதாம் தேதி வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பரத்பூரிலும் நாளைக் காலை 6 மணி வரை செல்பேசி இணையச் சேவைகள் துண்டிக்கப்படுகின்றன. ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோத்பூரில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Comment

Successfully posted