சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவு: அமைச்சருக்கு, ராஜேஸ்வரியின் பெற்றோர் நன்றி

Nov 18, 2019 03:07 PM 118

கோவையில் விபத்தில் சிக்கிய இளம்பெண்ணுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ராஜேஸ்வரியின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

கோவையில் நிகழ்ந்த விபத்தில் இளம்பெண் ராஜேஸ்வரி சிக்கி காயமடைந்தார். அவருக்கு சிறப்பான சிகிச்சையை அளிக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், இளம்பெண் ராஜேஸ்வரியின் பெற்றோர் நாகநாதன் - சித்ரா ஆகியோர், கோவை புதூரில் உள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்லத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

ராஜேஸ்வரிக்கு கூடுதல் மருத்துவ உதவியும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று அமைச்சரிடம் அவர்கள் கோரிக்கை மனுவை வழங்கினர். அவர்களது கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதியளித்தார்.

Comment

Successfully posted