ரஜினி மகளின் திருமண விழாவில் முதலமைச்சர் பங்கேற்பு

Feb 11, 2019 10:40 AM 122

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யாவின் திருமணத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா - விசாகனின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எஸ்.பி.வேலுமணி பங்கேற்றனர்.

மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல், கவிஞர் வைரமுத்து, தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், கலைப்புலி தாணு உள்ளிட்ட பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

Comment

Successfully posted