ரஜினி, கமல் கூட்டணி நாட்டிற்கு உதவாது: அமைச்சர் காமராஜ்

Nov 21, 2019 07:59 PM 119

நடிகர் ரஜினியும், கமலும் இணைவது, பேசும் பொருளாக இருக்குமே தவிர நாட்டிற்கு உதவாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சமுதாய முதலீட்டு நிதியாக மகளிர் குழுவை சேர்ந்த 509 பெண்களுக்கு 1 கோடி 54 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் காமராஜ் வழங்கினார். இதையடுத்து, அமைச்சர் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட அமமுகவினர் அதிமுகவில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எத்தனை பேர் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்று கூறினார்.

Comment

Successfully posted