ரஜினிகாந்த் நடிக்கும் 168 படத்தின் பெயர் "அண்ணாத்த"!

Feb 24, 2020 10:23 PM 840

சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் 168 வது படத்திற்கு ”அண்ணாத்த” என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக தர்பார் படம் வெளி வந்தது. இதை அடுத்து ரஜினிகாந்தின் 168 ஆவது படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றது. இயக்குநர் சிவா இயக்கி வரும் இந்த படத்தில் பிரபல நட்சத்திர நடிகர்கள் பலர் இடம் பெற்றுள்ளனர்.   இப்படத்திற்கு, மன்னவன், வியூகம், அண்ணாத்த ஆகிய பெயர்களில் ஒன்றை வைக்க பரிசீலிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், இந்த படத்திற்கு “அண்ணாத்த ” என்று பெயர் வைத்து மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இமான் இசையத்துள்ள இந்த படம், கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சம் கொண்டதாக உருவாகி வருகின்றது.

Comment

Successfully posted