மாநிலங்களவை தேர்தல் : முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலையில் அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

Mar 12, 2020 04:00 PM 617

மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து, அதிமுக சார்பாக போட்டியிடும் கே.பி.முனுசாமி, தம்பிதுரை ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டப்பேரவை செயலாளர் ஸ்ரீனிவாசனிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அதே போல், அதிமுக கூட்டணியிலுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் முன்னிலையில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Comment

Successfully posted